தெலங்கானாவில் புதருக்குள் வைத்து மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவனை, பொதுமக்கள் கல்லால் அடித்து அப்பெண்ணை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ், நவ்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் நாகேஸ்வரராவ், துன்புறுத்தல் காரணமாக நவ்யா இரண்டு குழந்தைகளுடன் கம்மம் நகரில் உள்ள என். ஜி. ஓ. காலனி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
நாகேஸ்வரராவ் வீட்டிற்கு அழைத்தும் மனைவி வராததால், கோபம் அடைந்த நாகேஸ்வரராவ் நேற்று என்ஜிஓ காலனியில் இருந்த நவ்யா வீட்டிற்கு சென்றுள்ளார்.
குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் மனைவியை மட்டும் தனியாக அழைத்து பேசுவதாக அழைத்து வந்துள்ளார். அருகே உள்ள முட்புதருக்குள் நவ்யாவை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ய நாகேஸ்வரராவ் முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்றவர்கள் அங்கு ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் விடாப்பிடியாக முட்புதருக்குள் கழுத்தை நெறிப்பது குறியாக இருந்தார் நாகேஸ்வரராவை அங்கிருந்த பொதுமக்கள் கற்களால் அடித்து அந்த பெண்ணை மீட்டனர்.
இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த காவலர்கள் நவ்யாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாகேஸ்வர ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலை ஓரத்தில் உள்ள முட்புதரில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement: