உலகம் முக்கியச் செய்திகள்

இந்தியாவில் இருந்து உடனே நாடு திரும்புங்கள்; அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,79,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பய்ட்டது. மேலும், தொற்றுக்கு 3,645 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ‘இந்தியாவில் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதால், யாரும் இந்தியா செல்ல வேண்டாம். அங்கு இருப்பவர்களும் உடனடியாக நாடு திரும்புவது நல்லது’ என தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

சிறப்பு கேமரா மூலம் புகைப்படங்களை எடுத்து அசத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்!

Karthick

ரூ.49.50 கோடி கடன் : கமல்ஹாசன் சொத்து மதிப்பு தெரியுமா?

Karthick

கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று அதிகரிப்பு!

Gayathri Venkatesan