தமிழகம் தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள்

குறைந்த விலையில் மின்சார வாகனத்தை உருவாக்கி அசத்திய ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்!

PiMo என்ற மின்சார வாகனத்தை உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

மெட்ராஸ் ஐஐடியில் Pi Beam என்ற மின் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் ஐஐடியின் முன்னாள் மாணவரான விகாஷ் சசிகுமார் என்பவரால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தை அங்கு பயிலும் மாணவர்கள் இயக்கி வருகின்றனர். அம்மாணவர்களின் முயற்சியால் இ-பைக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை உருவாக்க தேவையான பொருட்களில் 90 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. PiMo என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இ-பைக், பழங்கால மின்சார வாகனம் போல் காட்சியளிக்கிறது. இந்த வாகனத்தின் விலை ரூ.30 ஆயிரம் ஆகும்.

மேலும் இந்த வாகனம் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இது மற்ற வாகனத்தை காட்டிலும் குறைந்த வேகத்தில் அதாவது அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதனால் இதில் பயணிப்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கி.மீ வரை பயணம் செய்யலாம். இருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் ஸ்விங் ஆர்ம் மெக்கானிஸம் மற்றும் ட்யூவல் ஷாக் அப்சார்பர் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த வாகனத்துக்கான முன் பதிவுகளை திறந்த சில வாரங்களிலே வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் Pi Beam நிறுவனம் 2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் 10 ஆயிரம் வாகனத்தை விற்பனை செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது.

Advertisement:

Related posts

“தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு

Saravana Kumar

“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

Jeba

ரசிகரின் சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சோனு சூட்!

Jayapriya

Leave a Comment