திருச்சி கிழக்கு தொகுதியில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள மநீம வேட்பாளர் வீரசக்தி, அவற்றை சீரமைப்பேன் என உறுதியளித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி, தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப் பயணமாக பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வந்துள்ளார்.
அப்போது பேசிய வீரசக்தி, திருச்சி நகரின் முக்கிய பகுதியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமலும், பல இடங்களில் சாக்கடை வசதிகள் முறையாக இல்லாமலும் இருப்பதாக குறிப்பிட்டார். தான் வெற்றி பெற்றால், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவேன் என மநீம வேட்பாளர் வீரசக்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
Advertisement: