மதுரை அருகே சாலையில் நடந்து சென்ற மனைவியை பட்டப்பகலில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவனை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துவீரன் – கல்யாணி தம்பதி. இவர்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கல்யாணி தனது கணவன் முத்துவீரனிடம் பணம் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் கல்யாணி மேலூரில் இருந்ததால், அங்கு வந்து தருவதாக கூறி முத்துவீரன் மேலூர் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், மேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற கல்யாணியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் தப்பியோடிய முத்துவீரனை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதேநேரத்தில், கத்திக்குத்து தாக்குதலால் பலத்த காயமடைந்த கல்யாணி, சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement: