இந்தியா முக்கியச் செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில், கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு கிசிச்சை பெற்று வந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில், பாரூச் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டேல் மருத்துவமனையின் ஒரு பகுதியில், கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மையத்தில் நேற்று பகல் 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றி, மளமளவௌ பரவியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும் மீட்புக் குழுவினரும் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நோயாளிகள் மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதே போன்ற சம்பவம் கடந்த 23-ம் தேதி மகாராஷ்டிராவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:

Related posts

கத்திக்குத்தில் முடிந்த வாய்த்தகராறு; வெளியானது சிசிடிவி காட்சிகள்

Saravana Kumar

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!

L.Renuga Devi

அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 3 கட்டங்களாக நடைபெறும்

Niruban Chakkaaravarthi