இந்தியா உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்காவின் பிரபல பாடகி ரிஹானாவின் ஆதரவை அடுத்து ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டனும் தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உள்ள பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சமீபத்தில் அமெரிக்க பாப் ஸ்டார் பாடகர் ரிஹானா தனது ட்விட்டரில் குரல் கொடுத்திருந்தார். அதன் விளைவாக சர்வதேச அளவில் லட்சக் கணக்கில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருக தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், ஸ்பீட் ரேசர், தி மெடலர், ஏ பேட் மாம்ஸ் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் மூத்த நடிகையும் சமூக ஆர்வலருமான
சூசன் சரண்டன் (74), தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை பதிவிட்டு, இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஒற்றுமையுடன் நிற்பதாகவும் மேலும் அதுகுறித்த செய்தியை வாசிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, “வெளிநாட்டுப் பிரபலங்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு உண்மை அறிந்து பேச வேண்டும். மேலும் அவர்கள் பேசுவது ஆதாரமற்றது மட்டுமில்லாமல் பொறுப்பற்றதாகும். ட்விட்டரில் அவர்களின் ட்வீட்கள் இந்தியாவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.” எனக் கூறினார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட் தன்பெர்க், நடிகை மியா கலிஃபா, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

Niruban Chakkaaravarthi

டிச 7 ல் வேல் யாத்திரை நிறைவு: எல்.முருகன்

Niruban Chakkaaravarthi

Leave a Comment