செய்திகள்

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கிய இளைஞரை மீட்ட பொதுமக்கள்; வைரலாகும் வீடியோ

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை, பொதுமக்கள் மீட்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ஒகேனக்கல் மெயின் அருவி பகுதிகளில் குளித்து வருகின்றனர். சிலர் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் குளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஒகேனக்கல் அருகே உள்ள ஆலம்பாடி பகுதியில் ஒரு நபர் தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டதை கண்ட பெண் ஒருவர் அவரை காப்பாற்ற கூறி கூச்சலிட்டார். அதையடுத்து அங்கிருந்த 4 பேர் வேகமாக செயல்பட்டு மூழ்கி நபரை மீட்டு காப்பாற்றினர்.
மூழ்கிய இளைஞரை நான்கு பேர் காப்பாற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியும் சிலா் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

நாராயணசாமி அரசின் பயணம் அன்று முதல் இன்றுவரை!

Gayathri Venkatesan

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி!

Saravana

கபடி விளையாட்டு பெரிய அளவில் புகழ் பெற வேண்டும்: நடிகர் அருள்நிதி

Niruban Chakkaaravarthi

Leave a Comment