ஆசிரியர் தேர்வு இந்தியா லைப் ஸ்டைல்

இமாச்சலில் நில நடுக்கத்தையும் தாங்கும் பாரம்பரிய காத் குனி வீடுகள்!

இமாச்சல பிரதேசத்தின் சில கிராமங்கள் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் இன்னும் பழமையான கட்டுமான முறையையே பின்பற்றி வருகின்றன.


இமாச்சல பிரதேச மாநிலத்தின் திரித்தான் வாலி பகுதியில் அமைந்துள்ளது செக்னி கோத்தி. அங்குள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய கட்டிடமான காத்குனி முறையையே இன்னும் பின்பற்றுகின்றனர். மரத்தால் ஆன பொருளுக்கு சமஸ்கிருதத்தில் காத் என்று பெயர், கோனா என்பது இரு முனைகளைக் குறிக்கக் கூடியது. மரத்தாலும் கல்லாலும் மட்டுமே இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.


ஆயிரம் வருட பாரம்பரியம் மிக்க கட்டிட அமைப்பு முறையான இது நில நடுக்கங்களையும் தாங்கக் கூடியது. எந்தவித சிமெண்ட் பொருட்களும் இல்லாமல் மரப் பொருட்களைக் கொண்டு மட்டுமே வீட்டின் தூண்கள் நிறுவப்படுகிறது. கட்டிடத்தின் அடிக்கட்டுமானம் (அஸ்திவாரம்) தரைப் பகுதிக்கு மேல் வரை முழுக்க முழுக்க கற்களைக் கொண்டு அமைக்கப்படுவது வீட்டிற்கு வலிமையை ஏற்படுத்துகிறது.

இதற்குப் பிறகு காற்று உள்ளே புகும்படியாக இரண்டு அடுக்குகள் கொண்ட சுவர் எழுப்பப்படும். இவை சிறு கற்களைக் கொண்டு அமைக்கப்படுவதால் வீட்டின் உள்ளே வெப்பம், மின்சாரம், ஒலி ஆகியவை வருவது தடுக்கப்படுகிறது. காத்குனி அமைப்பு முறை வெயில் காலம், குளிர் காலத்திற்கு ஏற்ப தன்மையை மாற்றிக்கொள்ளும். குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளுமையாகவும் இது வைத்திருக்கும். காற்று புகும்படி சுவரின் அமைப்பு இருப்பதன் காரணமாக நிலநடுக்கம் வந்தாலும் கூட சுவரில் விரிசல் விழுவதோ, இடிந்து விழுவதோ தடுக்கப்படும்.


குல்லு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகர் கோட்டையை (இது தற்போது பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்டது) 500 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா சித் சிங் என்பவர், காத் குனி கட்டிட அமைப்பு முறையில் எழுப்பியுள்ளார். 1905 ஆம் ஆண்டு அப்பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருந்து வருகிறது. இமாச்சலுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த கட்டிட அமைப்பு முறையை மிஸ் செய்துவிடாமல் பார்த்து வாருங்கள்.

Advertisement:

Related posts

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

Saravana

உபியில் காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த பெற்றோர்..

Dhamotharan

விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை!

Nandhakumar

Leave a Comment