தமிழகம்

கடன் வாங்கிய விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்திய விவகாரம்; இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

வாங்கிய கடனை திருப்பித்தரவேண்டும் என நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம், 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால் நடிகர் ரஜினிகாந்த் தருவார் என முகுந்த்சந்த் போத்ராவுக்கு கஸ்தூரி ராஜா, கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, ரஜினிகாந்த்துக்கு உத்தரவிடக்கோரி போத்ரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டதாக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போத்ரா மறைந்துவிட்டதால் அவரது மகன் வழக்கை நடத்த அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு அறிவுறுத்தினர். இல்லாவிட்டால் தவறு செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Advertisement:

Related posts

கூட்டணி குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து!

Niruban Chakkaaravarthi

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!

Nandhakumar

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி!

Niruban Chakkaaravarthi