சட்டம் செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

ஆல் பாஸ் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை, 9, 10, 11ஆம் வகுப்பின் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை பள்ளிகளின் சங்க செயலாளர் ஆர்.கே.நந்தகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற எதிர்தரப்பு வாதத்தை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், பொதுநல விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பர் எனத் தெரிவித்தனர். அதனால் பள்ளிகளில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற அரசணையை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மேலும் 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்றும் மேலும் அதற்கு உரிய வழிகாட்டு விதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டது.

Advertisement:

Related posts

தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயம்: துறை ரீதியிலான விசாரணைக்கு சி.பி.ஐ உத்தரவு!

Saravana

ஈரோட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

Gayathri Venkatesan

மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Niruban Chakkaaravarthi