தமிழகம் முக்கியச் செய்திகள்

கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலாளர்!

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் 18 வயதில் இருந்து, 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும், என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், தொற்று பரவலை தடுப்பது சவாலாக உள்ளதாக கூறினார்.

30 சதவீத நோயாளிகள் மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்தார். ஒன்றரை கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை எப்போதும் வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளதால், இன்று தடுப்பூசி போடுவது சந்தேகம் தான், என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். .

Advertisement:

Related posts

கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜாமீன்!

Niruban Chakkaaravarthi

எய்ம்ஸ் உறுப்பினர்களாக எம்.பி.க்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு!

Ezhilarasan

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

Jeba