செய்திகள்

திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாக காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேவகோட்டை கண்டதேவி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பரப்புரையின்போது பேசிய ஹெச்.ராஜா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் பல நலத்திட்டங்களை பெற்றதாக முதல்வர் காரைக்குடி கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

கேரளாவில் 70.04% வாக்குப்பதிவுடன் தேர்தல் நிறைவு!

L.Renuga Devi

தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!

Saravana

போலி ‘பைசப்ஸ்’ அகற்ற சிக்கலான அறுவைச்சிகிச்சை!

Jeba