செய்திகள் முக்கியச் செய்திகள்

அதிரடி காட்டும் ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து பள்ளியின் மாணவர்கள் வருகை குறித்து ஆசியரிர்களிடம் கேட்டறிந்த தமிழிசை, பள்ளியின் உணவு கூடத்திற்கு சென்று அங்கு இருப்பில் இருக்கும் உணவு பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்

Advertisement:

Related posts

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!

Saravana Kumar

மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

Jayapriya

ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!

Jayapriya