குற்றம் முக்கியச் செய்திகள்

சென்னை வந்த விமானத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறைக்குள், மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்ம பார்சல்களில், 65 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, இன்று ஏர்இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், ஏர் இந்தியா ஊழியார்கள் விமானத்தை சுத்தப்படுத்தினர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் 2 மர்ம பார்சல்கள் இருந்ததை கண்ட ஊழியர்கள், உடனே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், பார்சல்களை திறந்து பார்த்ததில், அதில் சுமார் 65 லட்சம் மதிப்புள்ள, 1.36 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

Gayathri Venkatesan

ரேஷனில் அதிக பொருட்கள் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: உத்தரகாண்ட் முதல்வர்

Karthick

வாக்களித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

L.Renuga Devi