சினிமா முக்கியச் செய்திகள்

4 மொழிகளில் வெளியாகும் GODZILLA VS KONG திரைப்படம்!

ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படமான “GODZILLA VS KONG” நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “GODZILLA VS KONG” திரைப்படம் மார்ச் 2021 க்குள் ரிலீஸ் செய்யப்படும் என அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்நிலையில் வார்னர் பிரதர்ஸ் இப்படத்தின் ரிலீஸ் குறித்து டிவீட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. மேலும் அதில் திரைப்படத்தின் டீசர் ஒன்றையும் பகிர்ந்திருந்தது.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி HBO Max என்ற ஓடிடி தளத்திலும் வெளியிடப்படுவதாக திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். மேலும் இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெறும் சீன ராணுவம்!

Niruban Chakkaaravarthi

மாட்டுச் சாணம் கொண்டு தயாரான பெயிண்ட் – ரூ.30,000 கூடுதல் வருமானம்

Jayapriya

சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை!

Nandhakumar