செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“தாயை இழிவாக பேசியவர்களை இறைவன் தண்டிப்பார்” முதல்வர் பழனிசாமி!

“தாயை இழிவாக யார் பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பார்” என முதல்வர் பழனிசாமி நா தழுதழுக்க பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூரில், அதிமுக சார்பில் போட்டியிடும் கே.குப்பனை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய முதல்வர் பழனிசாமி, “தாயை இழிவாக யார் பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பார்” என கூறியுள்ளார்.

மேலும், “எவ்வளவு கீழ்த்தரமாக பேசியுள்ளார், ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் எப்படி கீழ்த்தரமாக பேசுவார்கள் என்பதை எண்ணி பாருங்கள். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தாய்மார்கள் நிலைமை என்னவாகும் என்று எண்ணி பாருங்கள். எனக்காக பரிந்து பேசவில்லை, ஒவ்வொருவரும் தாய் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள். தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும்.” என்றும்

“என்னுடைய தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகல் பாராமல் பாடுபடுபவர், அவர் இறந்துவிட்டார் அவரை பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசினர், முதலமைச்சருக்கே இந்த நிலைமை. நான் நினைத்தால் சாதிக்க முடியும், நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன், ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம். யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை தருவார். இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் வந்துவிட்டல் எப்படி அராஜகம் செய்வார்கள் என்று பெண்கள் எண்ணி பார்க்க வேண்டும்.” என்றும் முதல்வர் பேசியுள்ளார்.

முன்னதாக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி., ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகள்!

L.Renuga Devi

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு கோவில் திறப்பு!

Niruban Chakkaaravarthi

அதிகரிக்கும் கொரோனா தொற்று; டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Ezhilarasan