உலகம்

ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்திற்கு ஓவியங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள்

அமெரிக்காவில் போலீஸாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்திற்கு அவரது சொந்த ஊர் மக்கள் ஓவியங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னெபொலிஸில், கடந்தாண்டு மே மாதம் 25-ம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற அமெரிக்க கருப்பினத்தவர் போலீஸ் பிடியில் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தன் முட்டியால் அழுத்தி கொலை செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால், அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அந்தப்போராட்டத்தில் வன்முறைகள் வெடித்தன. அப்போது அதிபராக இருந்த டிரம்ப் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட்-ன் சொந்த ஊரில் மக்கள் ஓவியங்கள் வரைந்து, அவரது மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஜார்ஜ் ஃபிளாய்ட் பயின்ற பள்ளி சாலையில் “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” என்ற வாசகத்தை சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வரைந்தனர். மேலும் பள்ளி பருவத்தில் ஃபிளாய்ட் கால்பந்து வீரராக இருந்ததை நினைவு கூறும் வகையில், அவர் பயன்படுத்திய எண். 88 ஜெர்சியையும் சாலையில் வரைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:

Related posts

கோல்டன் குளோப்ஸ் 2021 விருது – மரணத்திற்குப் பிந்தைய விருதை வென்றார் சாட்விக் போஸ்மேன்!

Gayathri Venkatesan

அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்

Jeba

கென்யாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 3 மணி நேரத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த வினோதம்!

Dhamotharan

Leave a Comment