செய்திகள் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

கொரோனா பரவல் எதிரொலியாக இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 30ம் தேதி வரை தளர்வின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைவிதித்தும், கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடைவிதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.மாவட்டங்களில் காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்துள்ள அரசு, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்கலாம் என்றும் நின்றுகொண்டு பயணிக்க தடை விதித்துள்ளது.

பல சரக்கு கடை, ஷோரூம்கள் 50% வாடிக்கையாளருடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், தேநீர் கடைகள், அனைத்து திரையரங்குகளும் 50% வாடிக்கையாளருடன் இரவு 11 மணி வரை செயல்படலாம் என்றும், பொழுதுபோக்கு பூங்காக்கள் 50% பயனர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளரங்க நிகழ்வுகளில் 200 நபர்களும், திருமண நிகழ்வில் 100 நபர்களும், இறுதி ஊர்வலத்தில் 50 நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதித்துள்ள அரசு,அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களில் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடைவிதித்துள்ளது.

ஆட்டோவில் ஓட்டுநர் தவிர இருவரும், வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர 3பேரும் பயணிக்க அனுமதித்துள்ள அரசு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க இ-பதிவு முறை தொடரும் என்றும் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்: ஆர்டிஐ தகவல்!

L.Renuga Devi

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்குமா நாராயணசாமி அரசு?

Gayathri Venkatesan

“பண்பாட்டின் அழகு எங்களை தனித்துவமாக்கும்!” -ஏ.ஆர்.ரஹ்மான்

Karthick