செய்திகள்

Arogya setu முதல் Zoom வரை… 2020ம் ஆண்டில் அதிகம் வலம் வந்த வார்த்தைகள்!

2020ம் ஆண்டு சில வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புதிய புதிய வார்த்தைகள் சில வழக்கத்துக்கு வந்தன. அந்தவகையில் 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை A- Z வரை வரிசைப்படுத்தி பார்க்கலாம்.

A- AYUSH Ministry, Aarogya Setu app, airports
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுஷ் அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள், ஆரோக்கிய சேது செயலி மூலம் தெரிந்துகொண்டன. பயணம் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஏர்போர்ட் வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

B — Baking at home
ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருந்த மக்கள் விதவிதமான உணவுகளை தயாரிப்பதற்கு அதிக ஆர்வமுடன் இருந்தனர்.

C — Coronavirus, COVID-19
இந்த ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனாவைரஸ் என்ற வார்த்தை தான் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ஒன்று.

D — Doctors, Dalgona
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. அதேபோல் வீட்டில் இருந்த மக்கள் டல்கோனா காஃபி செய்து சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

E — Entertainment at home
கொரோனா நமக்கு மறைமுகமாக கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒன்று, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது.

F — Frontline warriors, face masks
கொரோனாவையும் பொருட்படுத்தாமல் மக்களுளை காப்பாற்றும் பணியில் முன்கள பணியாளர்கள் சிறந்த பங்காற்றினர். அதேபோல் இந்த ஆண்டு முகக்கவசம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது.

G — Government guidelines, gloves
கொரோனா தொடர்பாக மத்திய அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதேபோல் கையுறையும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

H — Hospitals, home quarantine
கொரோனா காரணமாக ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

I — Isolation, immunity
தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி மக்கள் அதிகம் சிந்திக்க ஆரம்பித்தனர்.

J — Job losses
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து மிகவும் அவதிக்குள்ளாகினர்.

K — Kadha
மசாலா பொருட்கள் மற்றும் மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேநீரை மக்கள் அருந்தியுள்ளனர்.

L — Lockdown
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. அதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

M — Migrant crisis, mental health
ஊரடங்கு காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த புலம்பெயர் தொழிலாளர் மிகவும் அவதிக்குள்ளாகினர். கொரோனா காரணமாக மக்கள் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

N — New normal
கொரோனா காரணமாக சில புதிய பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொண்டோம். சில பழக்கங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது.

O — Online classes
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் கல்வி மூலமாக பயின்று வருகின்றனர்.

P — Pandemic, PPE kits
தொற்றுநோய், பாதுகாப்பு உபகரணங்கள் பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது இந்த ஆண்டில்தான். கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது.

Q — Quarantine
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

R — Recovery
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், மீண்டு வந்தவர்கள் என இந்த வார்த்தையும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

S — Social distancing, sanitizer, symptoms
சமூக இடைவெளி, சானிடைசர், அறிகுறிகள் இந்த வார்த்தைகளை 2020ம் ஆண்டில் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். கொரோனாவில் இருந்த நம்மை காத்துக் கொள்வதற்கு இவை முக்கிய பங்கு வகித்தன.

T — Travel restrictions
கொரோனா காரணமாக போக்குவரத்துக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

U — Unlock
மார்ச் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன.

V — Virus, vaccine
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

W — Work from home
கொரோனா பரவல் காரணமாக அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியை மேற்கொண்டனர்.

X — Xenophobia
அந்நியர்கள் பற்றிய பயம் ஏற்படுவதுதான் Xenophobia. கொரோனா மற்றவர்களிடம் இருந்து பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவே அச்சத்தில் இருந்தனர்.

Y — Yoga at home
உடலை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டவுடன் அவர்கள் தேடிச் சென்றது யோகாவாக தான் இருக்கும்.

Z — Zoom meetings
பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் தங்கள் பணியை மேற்கொள்வதற்கு Zoom செயலி பேருதவி புரிந்தது.

Advertisement:

Related posts

ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!

Saravana

பெற்றோர்களின் அலட்சியம்: 3 சிறுமிகள் உயிரிழந்த சோகம்

Niruban Chakkaaravarthi

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து புபேந்தர் சிங் மான் விலகல்!

Saravana

Leave a Comment