இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

துறவியானார் ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய ரிலையன்ஸ் அதிகாரி!

வருடத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர், திடீரென துறவியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் பிரகாஷ் ஷா. ஆண்டுக்கு ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய அவர் கடந்த ஆண்டு திட்டப்பிரிவின் துணை தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றதுமே துறவியாக வேண்டும் என்ற ஆசையை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அவர் தீக்‌ஷை பெற முடியவில்லை. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி அன்று ஜைன துறவிக்கான தீட்சையை பெற்றார். அவருடன் அவர் மனைவி நைனாவும் தீக்‌ஷை பெற்று துறவியாகியுள்ளார்.

இவர்களின் இளைய மகன் 7 வருடங்களுக்கு முன்பே, தனது 24 வயதில் தீட்சை பெற்று துறவியாகியுள்ளார். அவரும் மும்பை ஐஐடியில் பொறியியல் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் ஷாவின் மற்றொரு மகனுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்த ஒருவர் துறவறம் பூண்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

ட்வீட்டரில் ட்ரெண்டான ‘rippedjeans’

Jeba

ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்- வி.எம்.சுதாகர்!

Jayapriya

சிஏஏ போராட்டம்: சஃபூரா சர்கா கைதுக்கு ஐநா கண்டனம்!

Jeba