உலகம் முக்கியச் செய்திகள் விளையாட்டு

கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு!

உலக அளவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பிரான்ஸ் கிராண்ட் ஓபன் டென்னிஸ் தொடரானது ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் நிர்வாகம் கூறுகையில் பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரானது ஏராளமான ரசிகர்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி வரும் மே மாதம் 23 ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த போட்டியானது கொரோனா பரவல் அதிகரிப்பதின் காரணமாக ஒரு வாரகாலம் அதாவது வரும் மே 31-ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் டென்னிஸ் நிர்வாக முதன்மை செயலாளர் கில்லஸ் மோரெட்டன் மார்ச் 31 ஆம் தேதியன்று பேசியதாவது,“கடந்த ஒரு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக எந்தவித சுப நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. மேலும் “தகுதி சுற்றுகள்” இந்த மாத திங்கள் 24 முதல் மே 28 வெள்ளி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து மே 30 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 13 ஞாயிற்றுக்கிழமை வரை முழு தொடரானது நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் வருகையை அதிகரிக்க விளையாட்டு அரங்கமானது 30 ஏக்கர் வரை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி நடக்கும் பட்சத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யப்படும் எனவும் டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர்!

Karthick

கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்

Gayathri Venkatesan

சேலம் மாணவருக்கு கொரோனா; அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனை தீவிரம்!

Jayapriya