இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

கொரோனா பாதிப்பு: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 91.

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி. கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும் இவர் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சோலி சொராப்ஜி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்தியா வின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவர் சோலி சொராப்ஜி. கடந்த 1930 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பின்னர் கடந்த 1971 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு அவர் அட்டர்னி ஜெனரலானார். பின்பு கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார்.

மறைந்த சோலி சொராப்ஜிக்கு மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement:

Related posts

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

Karthick

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

Karthick

மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

Ezhilarasan