தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கம் தேவை” – முதல்வர்

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது குறித்து குறிப்பிட்டார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், தமிழகம் வளர்ச்சியடையும் என்று கூறிய அவர், அதன் மூலமே பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதையும் பட்டியலிட்டார். கோதாவரி – காவிரி இணைப்பு போன்ற திட்டங்களுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்றும், மத்திய அரசு உதவி செய்தால் மட்டுமே அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என அவர் கூறினார்.

Advertisement:

Related posts

வட துருவத்தின் வான்வழியாக ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்; இந்திய விமான வராலாற்றில் புதிய சாதனை!

Saravana

நகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்!

Niruban Chakkaaravarthi

வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

Gayathri Venkatesan