செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மீனவர்களுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் – விஜய் வசந்த்

கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார்.

நாகர்கோவிலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க கடலோர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறினார்.

ஆனால் அந்த திட்டம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு மாற்றப்பட்டதாக, பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தவறான பரப்புரையை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மக்களவை உறுப்பினராக தன்னை தேர்வு செய்தால், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்தார்.

Advertisement:

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

Jayapriya

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Saravana

நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்: அமித் ஷா ஆலோசனை!

Jeba