இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

“நாம் மீண்டும் சவாலான சூழ்நிலையில் உள்ளோம்” – பிரதமர் மோடி!

கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக நடந்த ஆலோசனையில் பேசிய பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வீசி வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது பேசிய அவர், கொரோனாவின் முதல் அலையின் தாக்கத்தைக் காட்டிலும் இரண்டாம் அலையின் தாக்கம் நாட்டில் அதிகமாக இருந்து வருவதாகவும் கொரோனா அதிகமாகப் பரவும் மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், “ நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.26 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக மாஹாராஸ்டிரா, பஞ்சாப், சத்தீஷ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவின் முதல் அலையின் தாக்கத்தைக் காட்டிலும் இரண்டாம் அலையின் தாக்கம் நாட்டில் வெகுவாக பரவி வருகிறது. அதனால் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசுகள் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும், மக்கள் மத்தியில் கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வைத் தீவிரப்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, “கொரோனா தொற்றின் எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கிறதோ அந்த அளவை காட்டிலும் பரிசோதனை செய்யும் வேகமானது அதிகமாக இருக்க வெண்டும். பரிசோதனையின் மூலம் அதிகமாகப் பாதிக்கப்படும் இடங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பிட்ட பகுதியினை பாதுகாக்கப்பட்ட பகுதியாகக் கண்காணிக்க முடியும். நாட்டில் 70% ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.” என்று கூறியுள்ளார்.

தடுப்புசி குறித்து பேசிய பிரதமர், “கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி செலுத்துவது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. தடுப்பூசி தேவைப்படும் மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் தொடர்ந்து அளிக்கப்படும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அதிகப்படுத்த வேண்டும். மேலும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தி நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்துவதனை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று அதிக உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தலாம் இதன் மூலம் தொழில்களும் அதிகம் பாதிக்கப்படாது” என கொரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துதல் குறித்து சில வரைமுறைகளை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

Jayapriya

நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ள டெல்லி போலீஸ்..

Jayapriya

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர்!

Karthick