தமிழகம் முக்கியச் செய்திகள்

உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்: 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 150 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச் சரிவால் தௌலிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் கட்டுக்கடங்காத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில முதலமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படைகள் உத்தரகாண்ட் விரைந்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும், உத்தரகாண்ட் முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மீட்பு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, வெள்ள பாதிப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana

கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை..!

Jayapriya

“யார் விவசாயம் செய்யவில்லையோ, அவர்கள் தான் போராட்டம் நடத்துகின்றனர்” – ஹெச்.ராஜா

Saravana

Leave a Comment