செய்திகள் முக்கியச் செய்திகள்

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் நாக்பூர் வெடிமருந்து கழகம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையை தங்கராஜ் பாண்டியன் என்பவர் நடத்தி வந்துள்ளார். 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் மொத்தம் 36 அறைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். அப்போது மருந்து பொருள்களில் நேரிட்ட உராய்வு காரணமாக, திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக போராடி, தீயில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில், 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமுற்ற 12க்கும் மேற்பட்டோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement:

Related posts

காதலுக்கு எதிர்ப்பு : காதலர்கள் தற்கொலை

Niruban Chakkaaravarthi

எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்!

Jeba

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்திற்கு ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து!

Saravana Kumar