டெல்லி விவசாயிகளின் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பல பிரபலங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
“கோரிக்கைகளை கவனிக்கத் தவறியதன் விளைவுதான் இந்த போராட்டம். அரசாங்கத்திற்கு மக்களே அதிகாரத்தினை வழங்கியுள்ளனர். இந்த அதிகாரங்கள் மக்களை காக்கவே பயன்பட வேண்டும், மாறாக பெருமுதலாளிகள் நலன் சார்ந்து இருக்கக்கூடாது. தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க விவசாயிகள் முயற்சிக்கின்றனர். போராட்டம் என்பது அவர்களின் உரிமையாகும். அதனை ஆதரிப்பது ஜனநாயமாகும்.” என பேஸ்புக்கில் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தமிழ் திரையுலகில் ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Advertisement: