தமிழகம்

ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது! – ப.சிதம்பரம்

ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டதாகவும், ஊடகங்களில் ஆளும் கட்சி அளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதே அதற்கு சான்று என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த 3 மாதங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வரும் திட்டங்கள் எல்லாம் மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, தீபாவளி மத்தாப்பூ போன்றது என்றும் அதனால், எந்த பயனுமில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை திட்டங்களை அறிவித்ததாகவும், ஆனால், அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலவச மின்சார வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாகவும், அதற்கான நிதி எங்கே என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினர். மேலும், வெறும் அறிவிப்புக்கள் மட்டுமே எப்படி சாதனையாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement:

Related posts

தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்கும் தேர்தல் நடைபெறவுள்ளது: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

”நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பது கேரள உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது”- கமல்ஹாசன்!

Jayapriya

தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்: மு.க.ஸ்டாலின்

Saravana

Leave a Comment