இந்தியா- சீனா இடையிலான கல்வான் மோதலையடுத்து சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக பப்ஜி பயனர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் Fau-G செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த செயலியை வடிவமைத்துள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகை அக்ஷய் குமார் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்த 24 மணி நேரத்திற்குள் லட்சக்கணக்கான பயனர்கள் பதிவிறக்கம் செய்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் Fau-G கேமை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: