மகாராஷ்டிராவில் 20 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா கோண்டியா பகுதியில் விவேக் வர்ஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ,ஒரு நாள் அந்த குழந்தை அழுதுக்கொண்டே இருந்துள்ளது. இதனால் விவேக்கின் மனைவி குழந்தையை சமாதானம் படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த குழந்தை தனக்கு இனிப்பு வேண்டுமென்று கூறி அழுதுள்ளது. இதனை தொடர்ந்து விவேக்கின் மனைவி இனிப்பு வாங்குவதற்காக விவேக்கிடம் 5 ரூபாய் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விவேக், வைஷ்ணவியை தரதரவென இழுத்து சென்று கதவில் இடித்துள்ளார். இதை தடுக்க சென்ற அவரின் மனைவியையும் அடித்துள்ளார். பின்னர், அந்த குழந்தையை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ,அந்த குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வர்ஷா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் வழக்குப் பதிவு செய்து போலீசார் விவேக்கை கைது செய்தனர்.
Advertisement: