செய்திகள் முக்கியச் செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா மற்றும் புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரன் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடிக்கான நிதி ஆதாரங்கள் வரும் நிதிநிலை அறிக்கையிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள் மற்றும், அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Advertisement:

Related posts

அமெரிக்காவில் முதல் முறையாக 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Jeba

எழுவர் விடுதலை: மீண்டும் சிக்கல்

Niruban Chakkaaravarthi

Leave a Comment