இந்தியா தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள்

இந்திய ஏவுகணைகளின் புதிய அப்டேட்; மிரளும் அண்டை நாடுகள்!

சர்வதேச அளவில் இந்தியா தனி சிறப்புமிக்க நாடாகவும், தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நாடாகவும் இருக்கிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பில் ஏவுகணைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றது. தற்போது இதில் பயன்படுத்தப்படும் பல புதிய வரவுகள் மற்றும் அப்டேட்டுகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

  1. QRSAM

தரையிலிருந்து வான்வழியில் நடத்தப்படும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் Surface to Air mssile (QRSAM) என அழைக்கப்படுகின்றது. இந்த வகை ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.

இந்த வகை ஏவுகணையை எளிதில் வாகனங்கள் மூலமாக நினைத்த இடத்திற்கு கொண்டு செல்ல முடிவும். முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தில் உருக்கப்பட்டுள்ளது. இதில் திரவ எரிபொருள் உந்து சக்திக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் 25-30 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளையும் 6 கி.மீ உயரத்தில் உள்ள இலக்கினையும் துல்லியமாகக் தாக்க முடியும்.

  1. அடுத்த தலைமுறை ஆகாஷ்

இவ்வகை ஏவுகணைகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. சில மாற்றங்களை ஏற்படுத்தி, மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு “அடுத்த தலைமுறை ஆகாஷ்” என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக எடை குறைவாகவும், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் என்ஜினுக்கு மாற்றாக இரட்டை துடிப்பு திட ராக்கெட் மோட்டார் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 80 கி.மீ வரையுள்ள இலக்கினை துல்லியமாகத் தாக்கும்.

  1. XRSAM

2019-ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக தொலைவுக்கான வான்வழி தாக்குதல் ஏவுகணையானது 350 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த ஏவுகணை தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தேவைப்படும் இடங்களுக்கு சாலை மார்க்கமாகவே டிரக்குகளில் கொண்டு செல்ல முடியும்.

  1. VL அஸ்திரா

இவ்வகை ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இந்த வகை ஏவுகணைகள் கடற்படையினரால் மேம்படுத்தப்பட்டுள்ளது.

6 கி.மீ உயரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த ஏவுகணைகள் பயன்படுகின்றன.

  1. DRDO MANPADS

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்குவதற்கு இந்த வகையான ஏவுகணைகள் பயன்படும். தற்போது குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்குவதற்கு ரஷ்யாவின் lgla எனப்படும் சிறிய வகை ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் DRDO MANPADS, ரஷ்ய ஏவுகணைக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை பயன்படுத்த ஒரேயொரு வீரர் இருந்தாலே போதுமானது என்பது இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம், 3,000 மீட்டரிலிருந்து, 6 கி.மீ வரை துல்லியமாக தாக்க முடியும்.

  1. Barak 8ER

இந்த வகை ஏவுகணைகள் வான்வழி எதிர் தாக்குதலுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமைப்பெறத இந்த ஏவுகணை, 100 முதல் 150 கி.மீ வரை உள்ள இலக்குகளை தாக்குவதற்காக உருவாக்கப்படுகின்றது.

இந்த ஏவுகணையை கடற்படைக்காக முதன்மையாக உருவாக்கப்பட்டாலும், ராணுவத்திற்கும், விமானப்படை பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றது.

  1. AD-1 & AD-2

மேற்குறிப்பிட்ட ஏவுகணைகளைத் தொடர்ந்து, ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் AD-1 & AD-2 என்கிற ஏவுகணையும் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளான இவை தற்போது இரண்டாம் கட்ட பாதுகாப்பு தளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் திட்டம் தற்போது இல்லை! – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Nandhakumar

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மலர்ந்த காதல்: வாடிவாசலில் திருமணம்

Niruban Chakkaaravarthi

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

Jayapriya

Leave a Comment