சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்குவதாக தெரிவித்தார்.
பறக்கும் படைகளின் எண்ணிக்கை 48இல் இருந்து 96ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் படைகள் இருப்பது தேர்தலுக்கு பலமாக இருக்கும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு நாளைக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள் எனக்கூறிய அவர், இந்த குழுவில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடம்பெறுவர் எனத் தெரிவித்தார்.
Advertisement: