இந்தியா செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா முன்னிலை

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு மணி நிலவரப்படி திமுக கூட்டணி 143 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான இசக்கி சுப்பையா முன்னிலை பெற்றுள்ளார். 7-வது சுற்று முடிவில் அவர் 22,920 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் 16,483 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில், அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாகப் போட்டியிட்டது.

Advertisement:

Related posts

திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்கள், ஒரு பேராசிரியருக்கு கொரோனா உறுதி

Saravana Kumar

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Jayapriya

நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!

Arun