சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாரால் விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் ஏர் இந்தியா எர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 3.50 சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்த விமானி உடனே விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார். இதனால் விமானத்தில் பயணிக்க இருந்த 38 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உட்பட 46 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
Advertisement: