இந்தியா முக்கியச் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை : கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் முகவர் மற்றும் வேட்பாளார்கள் அனுமதிக்கப்படுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில், கிருமிநாசினி, சோப்பு வைக்க வேண்டும் என்றும், கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதி அளிக்கப்படும், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், இடவசதி கொண்டிருக்க வேண்டும், என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை, கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும், என அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவை, வழங்க வேண்டும் என்றும், தேவையான அளவு பாதுகாப்பு கவச உடைகளை வைத்திருக்க வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகே, பொதுமக்கள் கூட்டம் சேரக்கூடாது என்றும், ஏற்கனவே, அறிவித்தபடி வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

அதிமுகவில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்

Gayathri Venkatesan

தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

Karthick

காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!

Saravana Kumar