தமிழகம் முக்கியச் செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே 5 முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அறிவித்திருப்பதால் தேர்தல் பணியில் ஈடுபடும் முகவர்கள் மட்டும் தனிவாகனத்தில் வாக்குச்சாவடிக்கு அழைத்துசெல்லபட்டனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கு நேற்றைய தினத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பதிலாக மாற்று முகவர்கள் நியமிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் மேற்பார்வையில் வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளன.

Advertisement:

Related posts

கிராம உதவியாளர் தற்கொலை முயற்சி!

Saravana Kumar

கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!

Gayathri Venkatesan

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பிரச்சாரம் செய்வது என்பது இதுவே கடைசிமுறை: முத்தரசன்!

Jeba