தமிழகம்

“வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்..” – சத்யபிரதா சாகு

புதிய வாக்காளர்களுக்கு இலவசமாக வீட்டிற்கே வண்ணப்புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் தொடர்பான சேவைகள் வாக்காளர்களுக்கு விரைவாக சென்றடையும் வகையில், விரைவு அஞ்சல் மூலம், புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்தாண்டு முதல் வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு இலவசமாக வீட்டிற்கே வாக்காளர் அடையாளார் அட்டை வழங்கப்படும் என கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதற்காக அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எந்த வித இடர்பாடுகள் இன்றி வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதை உறுதிப்படுத்துவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Advertisement:

Related posts

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

Jeba

அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுமா? : அமைச்சர் செங்கோட்டையைன் பதில்

Saravana

Leave a Comment