செய்திகள் முக்கியச் செய்திகள்

வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மோகன்ராஜ் பழனி

கட்டுரையாளர்

தமிழ்நாட்டில் வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ன? என்பதை இந்த சிறப்பு தொகுதிப்பில் தெரிந்துகொள்வோம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும்/அவரால் அங்கிகரிக்கப்பட்ட நபர்/ அவரது தேர்தல் முகவர் மேற்கொள்ளும் தேர்தல் செலவுகளை சரியாக பராமரித்து தாக்கல் செய்வது அவசியம்.

 • என்னென்ன செய்ய வேண்டும்?
 • ஒரு வேட்பாளர் ரூ.30.8 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம்.
 • தேர்தல் செலவுக்கு என்று தனியாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்.
 • தேர்தல் செலவுகளை புதிய வங்கிக் கணக்கில் இருந்து தான் செலவிட வேண்டும்.
 • வேட்பு மனு செய்த நாளிலிருந்து, தேர்தல் முடிவு வரையிலான செலவுகள் கணக்கில் கொள்ளப்படும்.
 • தேர்தல் செலவுகளை, ஒரு பதிவேட்டில் வேட்பாளர் எழுதி வரவேண்டும்.
 • நட்சத்திர பேச்சாளரின் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.
 • அரசியல் தலைவர்களின் பொதுக்கூட்டம், பரப்புரைகளும் வேட்பாளர்களின் கணக்கில் பதியப்படும்.
 • தேர்தல் சார் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளில் அச்சிட்டவர், வெளியிட்டவர் பெயர் குறிப்பிட வேண்டும்.
 • அச்சிட்டதற்கான செலவும் சரியாக கண்காணிக்கப்படும்.
 • தேர்தல் நடத்தும் அதிகாரி வாகனங்களுக்கு அனுமதி வழங்குவார்.
 • தேர்தல் சார்ந்த செலவுகள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படும்.
 • தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை அளிக்க வேண்டும்.
 • வேட்பாளரின் செலவு விவரங்கள் தேர்தல் நிழல் செலவின பார்வையாளர்களின் பதிவேட்டோடு சரிபார்க்கப்படும்.
 • பரிசீலனைக்குப் பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.

 


தேர்தல் செலவீனங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

 • தேர்தல் செலவீனங்கள் கண்காணிக்கப்படுவதற்காக தேர்தல் செலவீனம் என்பதற்காக மட்டுமே தனியாக வங்கிக்கணக்கு ஒன்றை ஒவ்வொரு வேட்பாளரும் தொடங்க வேண்டும்.
 • வேட்புமனுத் தாக்கல் செய்த நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையான செலவினங்கள் வரை தேர்தல் செலவாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 • வேட்பாளரின் சொந்தபணம் உட்பட எந்த ஆதாரத்தின் மூலம் நிதி கிடைத்திருந்தாலும் இந்த வங்கிக்கணக்கின் மூலம்தான் செலவீனங்கள் மேற்கொள்ள வேண்டும் .
 • ஒவ்வொரு வேட்பாளரும் / அவரது தேர்தல் முகவரோ தேர்தல் செலவீனங்களை அதற்கென குறிப்பிட்ட பதிவேட்டில் அன்றாடம் குறித்து வைத்து பராமரிக்க வேண்டும்.
 • பொதுக்கூட்டங்கள் /ஊர்வலங்கள் ஆகியவற்றைக் கண்காணித்தல்:-
  ஒரு வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்துவதற்கு முன் அதற்கான செலவீன திட்டத்தோடு அனுமதி கோர வேண்டும்.
 • ஓவ்வொரு நிகழ்வின் செலவீனத்தையும் புகைப்படங்கள், காணொலிகள்,வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவு கணக்கிடும் குழு தனியாக கணக்கிடும்.

நட்சத்திர பேச்சாளர்களுக்கான செலவுகளை கண்காணித்தல்:-

 • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 77ன் படி , ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் விமானம் மூலம் அல்லது வேறு வகையான போக்குவரத்தின் மூலன் பயணம் செய்வதற்கான செலவு வேட்பாளரால் செய்யப்பட்ட செலவாக கருதப்படமாட்டாது.
 • ஒரு வேட்பாளருக்காக நட்சத்திர பேச்சாளர் பொதுக்கூட்டத்திலோ, ஊர்வலத்திலே வேட்பாளரின் பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் , அதற்கான அத்தனை செலவீனமும் வேட்பாளரின் செலவீனத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும்.
 • ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால், பதாகைகள் சுவரொட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தினால் ,அத்தனை செலவுகளையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் சமமாக பகிர்ந்து கணக்கில்கொள்ள வேண்டும்.
 • பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையை பகிர்ந்துகொண்டாலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவில் கணக்கிடப்படும்.
 • தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடும்போது அச்சிட்டவர், வெளியிட்டவர்,ஆகியவர்களின் பெயரும் முகவரிம் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 • தேர்தல் நடத்தும் அதிகாரி வாகனுங்களுகான அனுமதியை வழங்குவார்.
 • எழுத்துபூர்வமான அனுமதி இல்லாமல் வாகனம் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டால் தண்டனை வழங்கத்தக்க வகையில் செலவீனத்தோடு சேர்த்துக்கொள்ளப்படும்.
 • தேர்தல் செலவு கணக்குகளை சமர்பித்தல்,தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும்.
 • வேட்பாளர் சமர்பித்த செலவு விவரங்கள் தேர்தல் நிழல் செலவின பார்வையாளர்களின் பதிவேட்டோடு ஒப்பீடு செய்து சரிபார்க்கப்பட்டு , ஏதேனும் குளறுபடி இருந்தால் சம்மந்தப்பட்ட வேட்பாளுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும்.
 • இவ்வாறான பரிசீலனைகளுக்குப் பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அறிக்கைகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.

செய்தி தொகுப்பு நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மோகன்ராஜ் பழனி

Advertisement:

Related posts

பொது முடக்கம் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமித்ஷா

Gayathri Venkatesan

ஒரே நாளில் 62,258 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Jeba