தமிழகம் தேர்தல் 2021

எடப்பாடி பழனிசாமி செய்தது என்ன? – மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டார். பல்வேறு மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போடப்பட்டுள்ளது. ஆனால் அதனை எதிர்த்து தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்தார். திமுக ஆட்சி அமைந்ததும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பிள்ளையார் திடலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், உலக முதலீட்டார் மாநாட்டில் 27 சதவீதம் முதலீடு வந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய்யுரைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

Ezhilarasan

10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை; சூப்பர் மார்க்கெட்டின் புதிய முயற்சி!

Jayapriya

உடலில் ரத்தக்கறை… கையில் கத்தி.. இளம்பெண்ணின் கதையை கேட்டு அதிர்ந்த போலீசார்!

Saravana