தமிழகம் முக்கியச் செய்திகள்

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள்: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை பல கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நாளை காலை 6 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக அரிதி பெரும்பான்மையைப் பெறும் என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றிக் கொண்டாட்டங்களை வீட்டிலேயே நடத்திக்கொள்ளுங்கள் என்று தனது தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும் 2016ல் தேர்தலில் கருத்து கணிப்புப்படி முடிவுகள் வரவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வெற்றிபெறும்போது அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று முதல்வரும் துணை முதல்வரும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும் ஊர்வலமாக அணிவகுத்துச் செல்லக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.

Advertisement:

Related posts

நடிகர் விஜய் எதற்கு சைக்கிளில் சென்றார்? விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் விளக்கம்!

Karthick

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

Nandhakumar

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

Dhamotharan