தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 70 இடங்களைக் கைப்பற்றியது. வருகின்ற மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார். தமிழக சட்டமன்றத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததைத்தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தனது முதல்வரைப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பினார்.

Advertisement:

Related posts

மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

Gayathri Venkatesan

இந்தோனேசியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Saravana

விவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!

Saravana Kumar