சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து சேலம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது அவரை சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் சேலம் மாநகர மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர்.
அம்மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
Advertisement: