ஆசிரியர் தேர்வு இந்தியா வணிகம்

கொரோனா காலத்திலும் பொருளாதார எழுச்சி…!

கொரோனா காலத்தில் வீழ்ந்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுடன் கூடிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதை ஆங்கில எழுத்து வடிவமான, வி வடிவ எழுச்சி என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க, கடந்த ஆண்டு மார்ச் மாதம் , நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பின்பு சில தளர்வுகளுடன் ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா கால பொது முடக்கத்தில் சரிந்த தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்திய ரிசர்வ் வங்கயின் முன்னாள் ஆளுநர் சி.ரங்ககராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஆராய்ந்து அறிக்கையை தமிழக அரசுக்கு வழங்கியது.

இக்குழுவின் அறிக்கையின் படி தொழில் துறையில் வளர்ச்சியை முன்னிறுத்தி சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் எதிரொலியாக தமிழக அரசுடன் 88 நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மதிப்பு 66 ஆயிரம் கோடி ரூபாய் . இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஒரு லட்சத்து இருபத்தி ஓராயிரம் வேலை வாய்ப்புகளை தொழிலாளர்கள் பெறுவர் என அரசு தெரிவிக்கிறது.

குறிப்பாக ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரில் அமைக்கவுள்ள மின் சக்தியால் இயங்கும் வாகனத்தயாரிப்பு உற்பத்தி ஆலை, இதைத்தவிர வாகனத்தயாரிப்பு நிறுவனமான டெய்ம்லர் , மரபு சாரா எரிசக்தி துறையில் அதானி குழுமம் ஆகியவை குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்

இன்னொரு பக்கம் அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் கட்டுமானத் துறை, ஒரு சில மாதங்களாக தான் மீண்டெழ ஆரம்பித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தின் போது, சொந்த ஊர் திரும்பிய அண்டை மாநில தொழிலாளர்கள், குறைந்த அளவிலேயே தமிழகம் திரும்பியுள்ளனர். இதுவும் இத்துறையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது பட்ஜெட் வீடுகள் எனப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு தான் அதிக வாய்ப்பு என தெரிவிக்கிறார் கட்டுமான நிறுவன மேலாண் இயக்குநர் ஒருவர்.

இயந்திர பொறியியல் , இதர உற்பத்தி துறையில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் முப்பது சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டன. அவை இன்னும் திறக்கவே இல்லை. மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்த நிறுவனங்களும் நட்டத்தால், தொழில் நடத்த முடியாது என கூறுகின்றனர். இதற்கு காரணம் உற்பத்தி சார்ந்த மூலப்பொருட்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதே. இது சிறு குறு நிறுவனங்களை கடுமையாக பாதிக்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என தொழில் துறை கூட்டமைப்புகளின் பிரதிநிதி கே.ஈ.ரகுநாதன் கூறுகிறார்.

கொரோனா கால பொது முடக்கத்தால் எழுபது சதவீத பணியாளர்களின் வேலைவாய்ப்பு ஒரே நேரத்தில் பறிபோனது . கொரோனாவால் சரிந்த ஜவுளி, ஆயத்த ஆடையை பொறுத்தவரை தற்போது தான் மீண்டெழுந்து வருகிறது .. குறிப்பாக முகக்கவசம், நோய் தடுப்பு கவச உடைகள் இத்துறைக்கு புதிய வாசல்களை திறந்துள்ளது… ஆயத்த ஆடை ஏற்றுமதி வாரிய தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில் கடந்த ஏப்ரலில் 90 சதவீத வீழ்ச்சி கண்ட ஆயத்த ஆடை துறை.. இப்போது மீண்டு 10 சதவீத வளர்ச்சியில் இருக்கிறது என்கிறார்.

Advertisement:

Related posts

விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!

Saravana

விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

Saravana

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

Karthick

Leave a Comment