மின்சார சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமான வோல்ட்ரோ மோட்டார்ஸ், புதிதாக ஒரு மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஏதுவாக இருக்கும் வகையில் இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார சைக்கிள் பற்றி வோல்ட்ரோ மோட்டார்ஸின் தலைமை செயலாளர் பிரஷாந்தா கூறுகையில், “இந்த மின்சார சைக்கிளை தயாரிப்பதற்கு முன்னால், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வாகனங்களுக்கு இந்திய மக்களிடம் ஏன் வரவேற்பு இல்லை என்பது பற்றி ஆராய்ச்சி செய்தோம். ஆராய்ச்சி முடிவில் மின்சார சைக்கிள்கள் பொதுவாகவே 25 முதல் 35 கி. மீ வரை மட்டுமே பயணிக்கும் வகையில் தயாரிக்கப்படுவதை அறிந்தோம். நாங்கள் தயாரிக்கும் சைக்கிளில் பயண தூரத்தை அதிகரிக்க எண்ணினோம். தற்போது 100 கி. மீ வரை பயணம் செய்யக்கூடிய மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளோம்”. என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக மின்சார சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க இயலும். ஆனால் வோல்ட்ரோவின் மின்சார சைக்கிளில் இருவர் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: