குற்றம்

முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் கைது

தெலங்கானா மாநிலத்தில் முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மகாபூபாபாத் மாவட்டம் வவிலாலா கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அறிமுகமான பெண் செவிலியர் ஒருவருடன், தங்கள் கிராமத்தில் கருக்கலைப்பு செயலில் முறைகேடாக சந்தோஷ் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், எட்டு மாதம் இருந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலானது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், போலி மருத்துவர் சந்தோஷ், பெண் செவிலியர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

Advertisement:

Related posts

மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்!

Jeba

7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த நபர்!

Jayapriya

மகனை அவர்களது நண்பர்களே கொன்றுவிட்டதாக தந்தை போலீஸில் புகார்

Jeba