இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, மும்பை நகரில் ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாரஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாள் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை ஏழு மணிவரை வணிக வளாகங்கள், கடைகள், வியாபார நிறுவனங்கள், ஹோட்டல்கள், பூங்காகள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகள், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திரையரங்குகளை மூடும்படி மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய சேவைப்பணிகள் தவிர, பிற வியாபார நிறுவனங்கள் அனைத்தும் வார இறுதியில் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புனே நகரிலும் இரவு நேரத்தில் 12 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளை மூன்று வாரத்திற்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Saravana Kumar

டெல்லி சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்!

Saravana

வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Gayathri Venkatesan