இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

வங்கதேசத்தில் மீண்டும் லாக்டவுன்!

வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வங்கதேசம் முழுவதும் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 9 ஆயிரத்து 213 பேர் கொரோனா நோய்ததொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளைத் தவிர பிற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

150 நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Jayapriya

“துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்”: டிடிவி தினகரன்

Karthick

உறைப்பனியில் உறைந்து போன நயகரா நீர்வீழ்ச்சி!

Ezhilarasan